< சங்கீதம் 28 >

1 தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Dawid dwom. Wo na misu frɛ wo, Awurade me Botan; nsiw wʼaso wɔ me ho. Sɛ woyɛ komm a, mɛyɛ sɛ wɔn a wɔasian kɔ amoa mu no.
2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Tie me mmɔborɔsu bere a mefrɛ wo apɛ mmoa, bere a mema me nsa so kyerɛ wo Tenabea Kronkron hɔ.
3 அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
Mfa me mfra amumɔyɛfo mu ntwe me nkɔ, mfa me nka wɔn a wɔyɛ bɔne no ho. Wɔne wɔn yɔnkonom kasa fɛfɛ, nanso wɔde ɔtan sie wɔn koma mu.
4 அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
Twe wɔn aso wɔ nea wɔayɛ no so; wɔn adwuma bɔne no so; tua nea wɔde wɔn nsa ayɛ so ka na fa nea ɛfata wɔn san bra wɔn so.
5 அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
Sɛ wommu nea Awurade ayɛ ne nea ɔde ne nsa ayɛ no nti ɔbɛbrɛ wɔn ase na ɔremma wɔnnsɔre bio.
6 யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
Ayeyi nka Awurade, efisɛ watie me mmɔborɔsu.
7 யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
Awurade ne mʼahoɔden ne me nkatabo me koma wɔ ne mu ahotoso, na ɔboa me. Me koma di ahurusi na mede dwonto bɛda no ase.
8 யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
Awurade yɛ ahoɔden ma ne nkurɔfo; ne nkwagye nsraban ma nea wɔasra no ngo.
9 தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
Gye wo nkurɔfo na hyira wʼagyapade; yɛ wɔn hwɛfo, na wo ne wɔn nnantew afebɔɔ.

< சங்கீதம் 28 >