< சங்கீதம் 28 >
1 ௧ தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Давидов псалом. Към тебе ще извикам, Господи, канаро моя; Не замълчавай към мене, Да не би, ако останеш мълчалив към мене, Да се оприлича на ония, които слизат в рова.
2 ௨ நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Послушай гласа на молбите ми, когато викам към Тебе, Когато дигам ръце към най-вътрешното на Твоето светилище.
3 ௩ அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
Не ме завличай с нечестивите И с ония, които вършат беззаконие, Които говорят мир с ближните си, А в чието сърце има злоба.
4 ௪ அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
Въздай им според делата им И според нечестието на постъпките им; Въздай им според делата на ръцете им; Отдай им каквото заслужават.
5 ௫ அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
Понеже те не внимават на деянията на Господа Нито на делата на ръцете Му, Той ще ги събори, и няма да ги съгради.
6 ௬ யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
Благословен да е Господ, Защото послуша гласа на молбите ми
7 ௭ யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
Господ е сила моя и щит мой; На него е уповало сърцето ми, и Той ми помага; Затова се развесели сърцето ми, И с песните си ще Го възхваля,
8 ௮ யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
Господ е сила на людете Си; Той е крепост за избавление на помазаника Си.
9 ௯ தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
Избави людете Си и благослови наследството Си; Храни ги и носи ги да века.