< சங்கீதம் 26 >

1 தாவீதின் பாடல். யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
다윗의 시 내가 나의 완전함에 행하였사오며 요동치 아니하고 여호와를 의지하였사오니 여호와여 나를 판단하소서
2 யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
여호와여 나를 살피시고 시험하사 내 뜻과 내 마음을 단련하소서
3 உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
주의 인자하심이 내 목전에 있나이다 내가 주의 진리 중에 행하여
4 ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
허망한 사람과 같이 앉지 아니하였사오니 간사한 자와 동행치도 아니하리이다
5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.
내가 행악자의 집회를 미워하오니 악한 자와 같이 앉지 아니하리이다
6 யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
여호와여 내가 무죄하므로 손을 씻고 주의 단에 두루 다니며
7 எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
감사의 소리를 들리고 주의 기이한 모든 일을 이르리이다
8 யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
여호와여 내가 주의 계신 집과 주의 영광이 거하는 곳을 사랑하오니
9 என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
내 영혼을 죄인과 함께 내 생명을 살인자와 함께 거두지 마소서
10 ௧0 அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
저희 손에 악특함이 있고 그 오른손에 뇌물이 가득하오나
11 ௧௧ நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.
나는 나의 완전함에 행하오리니 나를 구속하시고 긍휼히 여기소서
12 ௧௨ என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.
내 발이 평탄한 데 섰사오니 회중에서 여호와를 송축하리이다

< சங்கீதம் 26 >