< சங்கீதம் 26 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.
Davidov. Dosudi mi pravo, Jahve, jer hodih u nedužnosti, i uzdajuć' se u Jahvu ja se ne pokolebah.
2 ௨ யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என்னுடைய சிந்தைகளையும் என்னுடைய இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்.
Ispitaj me, Jahve, iskušaj me, istraži mi bubrege i srce.
3 ௩ உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடக்கிறேன்.
Jer tvoja je dobrota pred očima mojim, u istini tvojoj ja hodim.
4 ௪ ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை.
S ljudima opakim ja ne sjedim i ne svraćam podlima.
5 ௫ பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கர்களோடு உட்காரமாட்டேன்.
Mrsko mi je društvo zlotvora, i s bezbošcima sjesti ne želim.
6 ௬ யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
U nedužnosti ruke svoje perem i obilazim žrtvenik tvoj, Jahve,
7 ௭ எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
da tvoju hvalu javno razglasim i pripovijedam sva divna djela tvoja.
8 ௮ யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
O Jahve, ljubim dom u kojem prebivaš i mjesto gdje slava tvoja stoluje.
9 ௯ என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
Ne pogubi mi dušu s grešnicima ni život moj s krvolocima;
10 ௧0 அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது; அவர்கள் வலதுகை லஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது.
na rukama je njihovim zločin, a desnica im puna mita.
11 ௧௧ நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும்.
A ja u nedužnosti svojoj hodim: izbavi me, milostiv mi budi.
12 ௧௨ என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் யெகோவாவை துதிப்பேன்.
Noga mi stoji na pravu putu: u zborovima blagoslivljat ću Jahvu.