< சங்கீதம் 25 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவாவே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
Dávidtól. Hozzád, Örökkévaló, viszem lelkemet.
2 ௨ என் தேவனே, உம்மை நம்பி இருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு மகிழவிடாமலிரும்.
Istenem, tebenned bízom, ne hagyj megszégyenülnöm, ne újjongjanak ellenségeim rajtam!
3 ௩ உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; காரணமில்லாமல் துரோகம்செய்கிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
Nem is szégy enülnek meg a téged remélők mind; megszégyenülnek a léhán hűtelenkedők.
4 ௪ யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
Útjaidat, oh Örökkévaló, tudasd velem, ösvényeidre taníts engem;
5 ௫ உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என்னுடைய இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
járass igazságodban és taníts engem, mert te vagy üdvösségem Istene, téged reméllek egész nap.
6 ௬ யெகோவாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய கருணையையும் நினைத்தருளும், அவை தொடக்கமில்லா காலம் முதல் இருக்கின்றது.
Emlékezzél meg irgalmadról, oh Örökkévaló, és kegyelmeidről, mert öröktől fogva valók.
7 ௭ என்னுடைய இளவயதின் பாவங்களையும் என்னுடைய மீறுதல்களையும் நினைக்காமலிரும்; யெகோவாவே, உம்முடைய தயவிற்காக என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
Ifjúhorom vétkeire és bűntetteimre ne emlékezzél; kegyelmed szerint emlékezzél te rólam jóságod kedvéért, oh Örökkévaló!
8 ௮ யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
Jóságos és egyenes az Örökkévaló, azért útba igazítja a vétkeseket.
9 ௯ சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
Járatja az alázatosakat a jog szerint és tanűja az alázatosokat az ő útjára.
10 ௧0 யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.
Mind az Őrökkévalónak ösvényei szeretet és igazság azoknak, kik megtartják szövetségét és bízonysága. it.
11 ௧௧ யெகோவாவே, என்னுடைய அக்கிரமம் பெரிது; உம்முடைய பெயரினால் அதை மன்னித்தருளும்.
Neved kedvéért, oh Örökkévaló, bocsásd meg bűnömet, mert nagy az.
12 ௧௨ யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
Ki az a férfi, a ki istenfélő? Azt igazítja azon útra, melyet válaszszon.
13 ௧௩ அவனுடைய ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ளும்.
Lelke jólétben marad és magzatja bírni fogja az országot.
14 ௧௪ யெகோவாவுடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
Az Örökkévaló titka az ő tisztelőinél van, és szövetségét tudatja velük.
15 ௧௫ என்னுடைய கண்கள் எப்போதும் யெகோவாவை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என்னுடைய கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
Szemeim mindig az Örökkévalóra néznek, mert ő húzza ki a hálóból lábaimat.
16 ௧௬ என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும், பாதிக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
Fordulj hozzám és kegyelmezz nekem, mert magános és szegény vagyok.
17 ௧௭ என்னுடைய இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என்னுடைய பிரச்சனைகளிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
Szívem szorongásai vajha tágulnának, szorúltságaimból vezess ki engem!
18 ௧௮ என்னுடைய பாதிப்பையையும் என்னுடைய துன்பத்தையும் பார்த்து, என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
Lásd nyomorúságomat és szenvedésemet és bocsásd meg mind a vétkeimet.
19 ௧௯ என்னுடைய எதிரிகளைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, கொடூர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
Lásd ellenségeimet, hogy sokan vannak, és erőszakot tevő gyűlölettel gyűlölnek engem.
20 ௨0 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் வந்துள்ளேன்.
Őrizd meg lelkemet és ments meg engem, ne szégyenüljek meg, mert benned van menedékem.
21 ௨௧ உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
Gáncstalanság és egyenesség óvjanak meg engem, mert téged reméllek.
22 ௨௨ தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடுவித்து மீட்டுவிடும்.
Váltsd meg, Isten, Izraélt mind a szorongásaiból!