< சங்கீதம் 23 >

1 தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
Dawid dwom. Awurade ne me hwɛfo, hwee renhia me.
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
Ɔma meda wira frɔmfrɔm adidibea mu; ɔgya me kɔ nsuo a ɛho dwoɔ ho,
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
ɔdwodwo me kra. Ɔde me fa akwantenenee so, ne din enti.
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
Sɛ menam owuo sum kabii mu mpo a, mensuro bɔne bi, ɛfiri sɛ, wo ne me na ɛwɔ hɔ; wʼabaa ne wo poma na ɛkyekyere me werɛ.
5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.
Woto me ɛpono wɔ mʼatamfoɔ anim. Wode ngo afɔ me tirim; me kuruwa ayɛ ma abu so.
6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
Yie ne adɔeɛ nko na ɛbɛdi mʼakyi me nkwa nna nyinaa; na mɛtena Awurade fie daa.

< சங்கீதம் 23 >