< சங்கீதம் 23 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
Jehová es mi pastor; no me faltará.
2 ௨ அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
En lugares de yerba me hará yacer: junto a aguas de reposo me pastoreará.
3 ௩ அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
Hará volver mi alma: guiarme ha por sendas de justicia por su nombre.
4 ௪ நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
Aunque ande en valle de sombra de muerte, no temeré algún mal, porque tú estarás conmigo: tu vara, y tu cayado ellos me confortarán.
5 ௫ என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.
Adornarás mesa delante de mí en presencia de mis angustiadores: ungiste mi cabeza con aceite; mi copa está revertiendo.
6 ௬ என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
Ciertamente el bien y la misericordia me seguirán todos los días de mi vida: y en la casa de Jehová reposaré por luengos días.