< சங்கீதம் 20 >

1 இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Да те услиши Господ у дан жалосни, да те заштити име Бога Јаковљевог.
2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
Да ти пошаље помоћ из светиње, и са Сиона да те поткрепи.
3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
Да се опомене свих приноса твојих, и жртва твоја паљеница да се нађе претила.
4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
Да ти да Господ по срцу твом; шта год почнеш, да ти изврши.
5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக.
Радоваћемо се за спасење твоје, и у име Бога свог подигнућемо заставу. Да испуни Господ све молбе твоје.
6 யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார்.
Сад видим да Господ чува помазаника свог; слуша га са светог неба свог; јака је десница Његова, која спасава.
7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
Једни се хвале колима, други коњима, а ми именом Господа Бога свог.
8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
Они посрћу и падају, а ми стојимо и не колебамо се.
9 யெகோவாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
Господе! Помози цару, и услиши нас кад Те зовемо.

< சங்கீதம் 20 >