< சங்கீதம் 20 >
1 ௧ இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக; யாக்கோபின் தேவனுடைய பெயர் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Zborovođi. Psalam. Davidov. Uslišio te Jahve u dan nevolje, štitilo te ime Boga Jakovljeva!
2 ௨ அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
Poslao ti pomoć iz Svetišta, branio te sa Siona!
3 ௩ நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
Spomenuo se svih ti prinosnica, bila mu mila paljenica tvoja!
4 ௪ அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
Udijelio ti što ti srce želi, ispunio sve namisli tvoje!
5 ௫ நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் யெகோவா நிறைவேற்றுவாராக.
Radovali se tvojoj pobjedi, u ime Boga svoga dizali stjegove! Ispunio Jahve svaku molbu tvoju!
6 ௬ யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகை செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய விண்ணப்பத்திற்கு பதில்கொடுப்பார்.
Znam evo: Jahve će pobjedu dati svom pomazaniku, uslišit ga iz svetih nebesa snagom pobjedne desnice svoje.
7 ௭ சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய பெயரைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
Jedni se hvale kolima bojnim, drugi konjima, mi imenom Jahve, Boga našega!
8 ௮ அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
Oni posrću i padaju, mi se držimo i stojimo.
9 ௯ யெகோவாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.
Jahve, daruj pobjedu kralju, usliši nas u dan kad te zazovemo!