< சங்கீதம் 2 >
1 ௧ தேசங்கள் ஏன் கொந்தளிக்க வேண்டும்? மக்கள் வீணான காரியத்தை ஏன் சிந்திக்கவேண்டும்?
Hvorfor larmer hedningene og grunder folkene på det som fåfengt er?
2 ௨ யெகோவாவுக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்செய்தவருக்கு விரோதமாகவும், பூமியின் இராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஒன்றாக ஆலோசனைசெய்து:
Jordens konger reiser sig, og fyrstene rådslår sammen mot Herren og mot hans salvede:
3 ௩ அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அவர்களுடைய கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம்; என்கிறார்கள்.
La oss sprenge deres bånd og kaste deres rep av oss!
4 ௪ பரலோகத்தில் அமர்ந்திருக்கிறவர் சிரிப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
Han som troner i himmelen, ler, Herren spotter dem.
5 ௫ அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களுடன் பேசுவார். தமது கடுங்கோபத்திலே அவர்களைக் கலங்கச்செய்வார்.
Så taler han til dem i sin vrede, og i sin harme forferder han dem:
6 ௬ நான் என்னுடைய பரிசுத்தமலையாகிய சீயோனில் என்னுடைய இராஜாவை அபிஷேகம்செய்து வைத்தேன் என்றார்.
Og jeg har dog innsatt min konge på Sion, mitt hellige berg!
7 ௭ தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; யெகோவா என்னை நோக்கி, நீர் என்னுடைய மகன், இன்று நான் உம்மை பிறக்கச்செய்தேன்;
Jeg vil kunngjøre hvad fastsatt er: Herren sa til mig: Du er min sønn, jeg har født dig idag.
8 ௮ என்னைக் கேளும், அப்பொழுது தேசங்களை உமக்குச் சொத்தாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
Begjær av mig! Så vil jeg gi dig hedningene til arv og jordens ender til eie.
9 ௯ இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
Du skal knuse dem med jernstav; som en pottemakers kar skal du sønderslå dem.
10 ௧0 இப்போதும் இராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாக இருங்கள்.
Og nu, I konger, gå viselig frem! La eder advare, I dommere på jorden!
11 ௧௧ பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள்.
Tjen Herren med frykt og juble med beven!
12 ௧௨ தேவமகன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருப்பதற்கு, தேவனை முத்தம்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே தேவனுடைய கோபம் பற்றியெரியும்; அவரிடம் அடைக்கலமாக இருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
Kyss Sønnen, forat han ikke skal bli vred, og I gå til grunne på veien! For snart kunde hans vrede optendes. Salige er alle de som tar sin tilflukt til ham.