< சங்கீதம் 18 >
1 ௧ இசைத் தலைவனுக்கு யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் யெகோவா அவனைத் தப்புவித்தபோது எழுதப்பட்ட பாடல். என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
JUGUAEYAJAO, O Jeova, y minetgotto.
2 ௨ யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.
Si Jeova y achojo, y castiyujo, yan y nanalibrijo: Yuusso, metgot y achojo, juangoco yo guiya güiya; patangjo yan y cánggilon y satbasionjo, y leca na torijo.
3 ௩ துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என்னுடைய எதிரிகளுக்கு நீங்கலாகிப் பாதுகாக்கப்படுவேன்.
Bae juagang si Jeova, ni combiene na mannae todo ni y alabansa: taegüije bae julibre gui enimigujo.
4 ௪ மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.
Mato guiya guajo y piniten finatae, ya y minilalag y tinaelaye janamaañaoyo.
5 ௫ பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன. (Sheol )
Y piniten naftan gaegue gui oriyajo, y lason finatae mato guiya guajo. (Sheol )
6 ௬ எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் காதுகளில் விழுந்தது.
Y chinatsagaco nae juagang si Jeova, ya juagang y Yuusso: güiya jajungog gui temploña y vosso, ya y inagangjo gui menaña, jumalom y talangaña.
7 ௭ அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது, மலைகளின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தன.
Ayo nae y tano calamten ya mayengyong, ya y simiento sija y egso manmanyengyong yan mangalamten, sa güiya lalalo.
8 ௮ அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து எரியும் நெருப்பு புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
Cajulo aso gui güiingña, ya guinin pachotña guafe manonggue y pinigan mañila pot este.
9 ௯ வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
Y janamangag y langet ya tumunog: ya teog na jinemjom gaegue gui sampapa y adengña.
10 ௧0 கேருபீன்மேல் ஏறி வேகமாகச் சென்றார்; காற்றின் இறக்கைகளைக் கொண்டு பறந்தார்.
Ya maudae güe gui jilo un querubin, ya gumupo güe; magajet na gumupo güe gui jilo y papan y manglo.
11 ௧௧ இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; தண்ணீர் நிறைந்த கறுத்த மழைமேகங்களையும் தம்மை சூழ்ந்திருக்கும் கூடாரமாக்கினார்.
Japolo jinemjom para fanatuganña; para y tabernaculuña gui oriyaña; jinemjom y janom, teog na mapagajes guinin y langet.
12 ௧௨ அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள், கல்மழையும் நெருப்புத்தழலையும் பொழிந்தன.
Pot y minalag gui menaña y teog na mapagajesña malofan: graniso yan pinigan guafe.
13 ௧௩ யெகோவா வானங்களிலே குமுறினார், உன்னதமான தேவனானவர் தமது சத்தத்தைத் தொனிக்கச்செய்தார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.
Jajulo locue si Jeova gui langet, ya y Gueftaquilo jasangan ni y inagangña: graniso yan pinigan guafe.
14 ௧௪ தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பயன்படுத்தி, அவர்களைக் கலங்கச்செய்தார்.
Ya jatago y flechaña ya manchinalapon: ya magajet, megae na lamlam ya manyinilang.
15 ௧௫ அப்பொழுது யெகோவாவே, உம்முடைய கண்டிப்பினாலும் உம்முடைய மூக்கின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, உலகின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.
Ayonae esta malie y tinadong y janom, ya janamababa y simiento y tano sija pot y linalatdemo, O Jeova, pot y güinaefen y jinagong gui güiingmo.
16 ௧௬ உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரிலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.
Jatago desde sanjilo, jachuleyo; ya jaatoyo guinin y megae na janom.
17 ௧௭ என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
Janalibrego gui manmetgot na enimigujo, yan y chumatliéyo, sa sija mas manmetgot qui guajo.
18 ௧௮ என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
Sija manmato guiya guajo gui un jaanen y chinatsagaco: lao si Jeova, güiya y fanapojo.
19 ௧௯ என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
Ya jachuleyo locue gui anae ancho na lugat: janalibreyo sa ninamagof ni guajo.
20 ௨0 யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்; என்னுடைய கைகளின் சுத்தத்திற்குத்தகுந்தபடி எனக்குச் சரிக்கட்டினார்.
Si Jeova jaapaseyo taemanoja y y tininasso: taemanoja y guinasgas y canaejo unaeyo.
21 ௨௧ ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனைவிட்டுத் துன்மார்க்கமாக விலகினதில்லை.
Sa juadaje y chalan Jeova: ya ti taelaye yo na juapattayo gui as Yuusso.
22 ௨௨ அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
Sa todo y jinasoña mangaegue gui menajo: ya ti junajanao guiya guajo y tinagoña.
23 ௨௩ உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து, என்னுடைய பாவத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன்.
Ya guajo cabales guiya güiya: ya juadaje yo guinin y tinaelayeco.
24 ௨௪ ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
Pot este jaapaseyo si Jeova taemanoja y tininasso: taemanoja y guinasgas y canaejo gui menan atadogña.
25 ௨௫ தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
Ya y gaemaase unfanue na gaemaasejao: ya y taotao ni y cabales, unfanue na cabales jao.
26 ௨௬ புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
Ya y gasgas unfanue na gasgasjao: ya y camten unfanue na camtenjao.
27 ௨௭ தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
Sa jago munalibre y mangaepinite na taotao; ya y sobetbio na atadog jago munatunog.
28 ௨௮ தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய யெகோவா என்னுடைய இருளை வெளிச்சமாக்குவார்.
Sa jago munamalag y candetto: si Jeova, Yuusso, namanana y jemjom guiya guajo.
29 ௨௯ உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
Sa pot jago na jufalagüe y inetnon sendalo: ya pot y Yuusso jugope y quelat.
30 ௩0 தேவனுடைய வழி உத்தமமானது; யெகோவாவுடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாக இருக்கிறார்.
Ya si Yuus, cabales y chalanña: y fino Jeova esta machague: patang güe para todo y numanangga güe.
31 ௩௧ யெகோவாவை தவிர தேவன் யார்? நம்முடைய தேவன் இல்லாமல் கன்மலையும் யார்?
Jaye si Yuus yaguin ti si Jeova güe? ya jaye y acho, jaguin ti si Yuusta?
32 ௩௨ என்னைப் பலத்தால் இடைகட்டி, என்னுடைய வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
Si Yuus jagogode yo ni y minetgot: ya jafatitinas cabales y chalanjo?
33 ௩௩ அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
Jafatitinas y adengjo taegüije y adeng y benado: ya janasagayo gui taquilo na sagajo sija.
34 ௩௪ வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி, என்னுடைய கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
Jafanagüe y canaejo para y guera: ya enaomina y canaejo judobla y atcas bronse.
35 ௩௫ உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகை என்னைத் தாங்குகிறது; உம்முடைய கருணை என்னைப் பெரியவனாக்கும்.
Ya unnaeyo locue ni y patang gui satbasionmo: ya y agapa na canaemo mumantietieneyo; ya y minansomo munamegaeyo.
36 ௩௬ என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
Unnadangculo y pinecatto gui papajo; ya y adengjo ti usulong.
37 ௩௭ என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்தேன்; அவர்களை அழிக்கும் வரைக்கும் நான் திரும்பவில்லை.
Judulalag y enimigujo sija, ya jugâchâ: ya ti jubirago talo asta que jocog.
38 ௩௮ அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
Junafanmañetnot, ya ti siña mangajulo: mamodong sija gui papa adengjo.
39 ௩௯ போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கச்செய்தீர்.
Sa guinin ungode yo ni y minetgot para y guera: unnafanecon y enimigujo gui papajo.
40 ௪0 நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி, என்னுடைய எதிரிகளின் கழுத்தை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
Guinin unfatinas ni y enimigujo na unaeyo ni y tataloñija, para juyulang y chumatliiyo.
41 ௪௧ அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களைக் காப்பாற்றுகிறவர்கள் ஒருவருமில்லை; யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் பதிலளிக்கிறதில்லை.
Manaagang, ya taya jaye ufansinatba: manaagange si Jeova ya ti manjiningog.
42 ௪௨ நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
Ayonae juguleg sija taegüije y petbos gui menan y manglo; taegüije y fache gui chalan ni y manmachalapon.
43 ௪௩ மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர், தேசங்களுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத மக்கள் எனக்கு சேவைசெய்கிறார்கள்.
Guinin unnalibre yo gui y inaguaguat y taotao: guinin unadaje yo para jumagas gui nasion sija: y taotao sija ni ti jutungo ujasesetbeyo.
44 ௪௪ அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் என்னிடம் கூனிக்குறுகுகிறார்கள்.
Ya anae jajungog guiya guajo ujaosgueyo: ya y taotao juyong ujaosgueyo ni y dinague.
45 ௪௫ அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.
Ya taotao juyong manlinachae ya manmamamaela ya manlalaolao guinin manmapongle.
46 ௪௬ யெகோவா உயிருள்ளவர்; என்னுடைய கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என்னுடைய இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
Lâlâ si Jeova; ya ubendito y achojo: ya umanataquilo na Yuus y satbasionjo.
47 ௪௭ அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
Si Yuus ni y numae yo y inemog, ya jasujeta y taotao gui papajo.
48 ௪௮ அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்களைவிட என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
Janalibre yo gui enimigujo: magajet na unnasanjiloyo gui ayo sija y mangajulo contra guajo: ya janalibre yo gui taotao ni y matatnga.
49 ௪௯ இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய பெயருக்கு பாட்டு பாடுவேன்.
Pot este junae jao grasias gui entalo y nasion sija, O Jeova; ya jucanta y alabansa para y naanmo.
50 ௫0 தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதிற்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.
Dangculo na linibre janae y rayña; ya jafanue minaase ni y pinalaeña; as David ya y semiyaña para taejinecog.