< சங்கீதம் 16 >

1 தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
Michtham de David. GUÁRDAME, oh Dios, porque en ti he confiado.
2 என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
Dijiste, [oh alma mía], á Jehová: Tú eres el Señor: mi bien á ti no [aprovecha];
3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
[Sino] á los santos que están en la tierra, y á los íntegros: toda mi afición en ellos.
4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
Multiplicaránse los dolores de aquellos que sirven diligentes á otro [dios]: no ofreceré yo sus libaciones de sangre, ni en mis labios tomaré sus nombres.
5 யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.
Jehová es la porción de mi parte y de mi copa; tú sustentarás mi suerte.
6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
Las cuerdas me cayeron en lugares deleitosos, y es hermosa la heredad que me ha tocado.
7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
Bendeciré á Jehová que me aconseja: aun en las noches me enseñan mis riñones.
8 யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
A Jehová he puesto siempre delante de mí: porque está á mi diestra no seré conmovido.
9 ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
Alegróse por tanto mi corazón, y se gozó mi gloria: también mi carne reposará segura.
10 ௧0 என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol h7585)
Porque no dejarás mi alma en el sepulcro; ni permitirás que tu santo vea corrupción. (Sheol h7585)
11 ௧௧ வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Me mostrarás la senda de la vida: hartura de alegrías hay con tu rostro; deleites en tu diestra para siempre.

< சங்கீதம் 16 >