< சங்கீதம் 16 >
1 ௧ தாவீதின் மிக்தாம் என்னும் பாடல். தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
Dāvida sirds dziesma. Pasargi mani, ak Dievs! jo es paļaujos uz Tevi.
2 ௨ என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி: தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர், என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
Es saku uz To Kungu: Tu esi Tas Kungs, bez Tevis man labuma nav.
3 ௩ பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என்னுடைய முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாக இருக்கிறது என்று சொன்னாய்.
Pie tiem svētiem, kas virs zemes, un tiem godīgiem ir viss mans labais prāts.
4 ௪ அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்களுடைய பெயர்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
Tiem, kas pieņem citu dievu, būs lielas sāpes; es neupurēšu viņu asiņu dzeramos upurus, un neņemšu savā mutē viņu vārdu.
5 ௫ யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்; என்னுடைய சுதந்தரத்தை தேவனே நீர் காப்பாற்றுகிறீர்.
Tas Kungs ir mana tiesa un mana daļa, Tu glabā manu mantas tiesu.
6 ௬ நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான பங்கு எனக்கு உண்டு.
Man daļa tikusi jaukā vietā, tiešām, man ir nākusi skaista manta.
7 ௭ எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்; இரவுநேரங்களிலும் என்னுடைய உள்மனம் என்னை உணர்த்தும்.
Es slavēšu To Kungu, kas man dod padomu, pat naktī mana sirds mani pamāca.
8 ௮ யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.
Es turu To Kungu bez mitēšanās savā priekšā, jo Viņš man ir pa labai rokai, - es nešaubīšos.
9 ௯ ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து; என்னுடைய உடலும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்.
Tādēļ mana sirds priecājās, un mans gods līksmojās, un pat mana miesa dzīvos droši.
10 ௧0 என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்; உம்முடைய பரிசுத்தவான் அழிவைக் காண்பதில்லை. (Sheol )
Jo Tu manu dvēseli nepametīsi kapā, Savam Svētam Tu neliksi redzēt satrūdēšanu. (Sheol )
11 ௧௧ வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
Tu man dari zināmu dzīvības ceļu, priekš Tava vaiga ir līksmošanās pilnība, un prieks un jaukums pie Tavas labās rokas mūžīgi.