< சங்கீதம் 15 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?
Псало́м Давидів.
2 ௨ உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
Той, хто в невинності ходить, і праведність чинить, і правду говорить у серці своїм,
3 ௩ அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
хто не обмовля́є своїм язиком, і злого не чинить для друга свого, і свого ближнього не зневажає!
4 ௪ ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.
Обридли́вий погорджений в очах його, і він богобі́йних шанує, присягає, для себе хоча б і на зло, — і дотримує;
5 ௫ தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
не дає свого срі́бла на ли́хву, і не бере на невинного пі́дкупу. Хто чинить таке, — ніко́ли той не захита́ється!