< சங்கீதம் 149 >
1 ௧ அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
할렐루야 새 노래로 여호와께 노래하며 성도의 회중에서 찬양할지어다
2 ௨ இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
이스라엘은 자기를 지으신 자로 인하여 즐거워하며 시온의 자민은 저희의 왕으로 인하여 즐거워 할지어다
3 ௩ அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
춤 추며 그의 이름을 찬양하며 소고와 수금으로 그를 찬양할지어다
4 ௪ யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
여호와께서는 자기 백성을 기뻐하시며 겸손한 자를 구원으로 아름답게 하심이로다
5 ௫ பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
성도들은 영광 중에 즐거워하며 저희 침상에서 기쁨으로 노래할지어다
6 ௬ தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
그 입에는 하나님의 존영이요 그 수중에는 두 날 가진 칼이로다
7 ௭ அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
이것으로 열방에 보수하며 민족들을 벌하며
8 ௮ அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
저희 왕들은 사슬로, 저희 귀인은 철고랑으로 결박하고
9 ௯ இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
기록한 판단대로 저희에게 시행할지로다 이런 영광은 그 모든 성도에게 있도다 할렐루야