< சங்கீதம் 147 >

1 யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
הללו-יה כי-טוב זמרה אלהינו-- כי-נעים נאוה תהלה
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
בונה ירושלם יהוה נדחי ישראל יכנס
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
הרפא לשבורי לב ומחבש לעצבותם
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
מונה מספר לכוכבים לכלם שמות יקרא
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
גדול אדונינו ורב-כח לתבונתו אין מספר
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
מעודד ענוים יהוה משפיל רשעים עדי-ארץ
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
ענו ליהוה בתודה זמרו לאלהינו בכנור
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
המכסה שמים בעבים-- המכין לארץ מטר המצמיח הרים חציר
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
נותן לבהמה לחמה לבני ערב אשר יקראו
10 ௧0 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
לא בגבורת הסוס יחפץ לא-בשוקי האיש ירצה
11 ௧௧ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
רוצה יהוה את-יראיו-- את-המיחלים לחסדו
12 ௧௨ எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
שבחי ירושלם את-יהוה הללי אלהיך ציון
13 ௧௩ அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
כי-חזק בריחי שעריך ברך בניך בקרבך
14 ௧௪ அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
השם-גבולך שלום חלב חטים ישביעך
15 ௧௫ அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
השלח אמרתו ארץ עד-מהרה ירוץ דברו
16 ௧௬ பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
הנתן שלג כצמר כפור כאפר יפזר
17 ௧௭ அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
משליך קרחו כפתים לפני קרתו מי יעמד
18 ௧௮ அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
ישלח דברו וימסם ישב רוחו יזלו-מים
19 ௧௯ யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
מגיד דברו ליעקב חקיו ומשפטיו לישראל
20 ௨0 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
לא עשה כן לכל-גוי-- ומשפטים בל-ידעום הללו-יה

< சங்கீதம் 147 >