< சங்கீதம் 146 >
1 ௧ அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
Хвали, душе моя, Господа:
2 ௨ நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
восхвалю Господа в животе моем, пою Богу моему, дондеже есмь.
3 ௩ பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
Не надейтеся на князи, на сыны человеческия, в нихже несть спасения.
4 ௪ அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
Изыдет дух его, и возвратится в землю свою: в той день погибнут вся помышления его.
5 ௫ யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
Блажен, емуже Бог Иаковль помощник его, упование его на Господа Бога своего,
6 ௬ அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
сотворшаго небо и землю, море, и вся, яже в них: хранящаго истину в век,
7 ௭ அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
творящаго суд обидимым, дающаго пищу алчущым. Господь решит окованныя:
8 ௮ குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
Господь умудряет слепцы: Господь возводит низверженныя: Господь любит праведники.
9 ௯ அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
Господь хранит пришелцы, сира и вдову приимет, и путь грешных погубит.
10 ௧0 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.
Воцарится Господь во век, Бог твой, Сионе, в род и род.