< சங்கீதம் 146 >

1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
你們要讚美耶和華! 我的心哪,你要讚美耶和華!
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
我一生要讚美耶和華! 我還活的時候要歌頌我的上帝!
3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
你們不要倚靠君王,不要倚靠世人; 他一點不能幫助。
4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
他的氣一斷,就歸回塵土; 他所打算的,當日就消滅了。
5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
以雅各的上帝為幫助、 仰望耶和華-他上帝的,這人便為有福!
6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
耶和華造天、地、海,和其中的萬物; 他守誠實,直到永遠。
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
他為受屈的伸冤, 賜食物與飢餓的。 耶和華釋放被囚的;
8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
耶和華開了瞎子的眼睛; 耶和華扶起被壓下的人。 耶和華喜愛義人。
9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
耶和華保護寄居的, 扶持孤兒和寡婦, 卻使惡人的道路彎曲。
10 ௧0 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.
耶和華要作王,直到永遠! 錫安哪,你的上帝要作王,直到萬代! 你們要讚美耶和華!

< சங்கீதம் 146 >