< சங்கீதம் 145 >
1 ௧ தாவீதின் நன்றிப்பாடல். ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் நன்றிசொல்லுவேன்.
Хвала Давида. Буду превозносить Тебя, Боже мой, Царь мой, и благословлять имя Твое во веки и веки.
2 ௨ நாள்தோறும் உமக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய பெயரைத் துதிப்பேன்.
Всякий день буду благословлять Тебя и восхвалять имя Твое во веки и веки.
3 ௩ யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
Велик Господь и достохвален, и величие Его неисследимо.
4 ௪ தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
Род роду будет восхвалять дела Твои и возвещать о могуществе Твоем.
5 ௫ உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.
А я буду размышлять о высокой славе величия Твоего и о дивных делах Твоих.
6 ௬ மக்கள் உம்முடைய பயங்கரமான செயல்களின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன்.
Будут говорить о могуществе страшных дел Твоих, и я буду возвещать о величии Твоем.
7 ௭ அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
Будут провозглашать память великой благости Твоей и воспевать правду Твою.
8 ௮ யெகோவா இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
Щедр и милостив Господь, долготерпелив и многомилостив.
9 ௯ யெகோவா எல்லோர்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாச் செயல்களின்மேலுமுள்ளது.
Благ Господь ко всем, и щедроты Его на всех делах Его.
10 ௧0 யெகோவாவே, உம்முடைய செயல்களெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உமக்கு நன்றி சொல்வார்கள்.
Да славят Тебя, Господи, все дела Твои, и да благословляют Тебя святые Твои;
11 ௧௧ மனிதர்களுக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்ஜியத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
да проповедуют славу царства Твоего, и да повествуют о могуществе Твоем,
12 ௧௨ உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
чтобы дать знать сынам человеческим о могуществе Твоем и о славном величии царства Твоего.
13 ௧௩ உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
Царство Твое - царство всех веков, и владычество Твое во все роды. Верен Господь во всех словах Своих и свят во всех делах Своих.
14 ௧௪ யெகோவா விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.
Господь поддерживает всех падающих и восставляет всех низверженных.
15 ௧௫ எல்லா உயிர்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு உணவுகொடுக்கிறீர்.
Очи всех уповают на Тебя, и Ты даешь им пищу их в свое время;
16 ௧௬ நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
открываешь руку Твою и насыщаешь все живущее по благоволению.
17 ௧௭ யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது செயல்களிலெல்லாம் கிருபையுள்ளவருமாக இருக்கிறார்.
Праведен Господь во всех путях Своих и благ во всех делах Своих.
18 ௧௮ தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.
Близок Господь ко всем призывающим Его, ко всем призывающим Его в истине.
19 ௧௯ அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார்.
Желание боящихся Его Он исполняет, вопль их слышит и спасает их.
20 ௨0 யெகோவா தம்மில் அன்புகூருகிற அனைவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர்கள் அனைவரையும் அழிப்பார்.
Хранит Господь всех любящих Его, а всех нечестивых истребит.
21 ௨௧ என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.
Уста мои изрекут хвалу Господню, и да благословляет всякая плоть святое имя Его во веки и веки.