< சங்கீதம் 143 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
Davut'un mezmuru Duamı işit, ya RAB, Yalvarışlarıma kulak ver! Sadakatinle, doğruluğunla yanıtla beni!
2 ௨ உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.
Kulunla yargıya girme, Çünkü hiçbir canlı senin karşında aklanmaz.
3 ௩ எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
Düşman beni kovalıyor, Ezip yere seriyor. Çoktan ölmüş olanlar gibi, Beni karanlıklarda oturtuyor.
4 ௪ என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
Bu yüzden bunalıma düştüm, Yüreğim perişan.
5 ௫ ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
Geçmiş günleri anıyor, Bütün yaptıklarını derin derin düşünüyor, Ellerinin işine bakıp dalıyorum.
6 ௬ என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)
Ellerimi sana açıyorum, Canım kurak toprak gibi sana susamış. (Sela)
7 ௭ யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.
Çabuk yanıtla beni, ya RAB, Tükeniyorum. Çevirme benden yüzünü, Yoksa ölüm çukuruna inen ölülere dönerim.
8 ௮ அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
Sabahları duyur bana sevgini, Çünkü sana güveniyorum; Bana gideceğim yolu bildir, Çünkü duam sanadır.
9 ௯ யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
Düşmanlarımdan kurtar beni, ya RAB; Sana sığınıyorum.
10 ௧0 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.
Bana istemini yapmayı öğret, Çünkü Tanrım'sın benim. Senin iyi Ruhun Düz yolda bana öncülük etsin!
11 ௧௧ யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.
Ya RAB, adın uğruna yaşam ver bana, Doğruluğunla kurtar beni sıkıntıdan.
12 ௧௨ உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; நான் உமது அடியேன்.
Sevginden ötürü, Öldür düşmanlarımı, Yok et bütün hasımlarımı, Çünkü senin kulunum ben.