< சங்கீதம் 143 >

1 தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
Zsoltár Dávidtól. Örökkévaló, halljad imámat, figyelj könyőrgésemre; hűségedben hallgass meg, igazságodban!
2 உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.
S ne szállj ítéletre szolgáddal, mert nem bizonyul igaznak előtted semmi élő.
3 எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
Mert ellenség üldözte lelkemet, földig zúzta éltemet, lakoztatott engem sötét helyeken, mint őskornak holtjait.
4 என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
S elborult bennem szellemem, belsőmben eliszonyodik a szivem.
5 ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
Megemlékeztem a hajdankor napjairól, elmélkedtem minden tettedről, kezed művéről elgondolkodtam.
6 என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)
Kezeimet terjesztettem hozzád; lelkem, mint a bágyadt föld, eped feléd. Széla.
7 யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.
Gyorsan hallgass meg, Örökkévaló, lelkem elepedt; ne rejtsd el tőlem arczodat, hogy ne legyek hasonlóvá a gödörbe szállókhoz.
8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
Hallasd velem reggel szeretetedet, mert benned biztam; tudasd velem az utat, melyen járjak, mert hozzád vittem lelkemet.
9 யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
Ments meg ellenségeimtől, Örökkévaló, hozzád menekültem.
10 ௧0 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.
Taníts engem, hogy megtegyem akaratodat, mert te vagy Istenem; jóságos szellemed vezessen engem síkság földjén.
11 ௧௧ யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.
Neved kedvéért tarts életben, igazságoddal vezesd ki lelkemet a szorultságból.
12 ௧௨ உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; நான் உமது அடியேன்.
És kegyelmedben semmisítsd meg ellenségeimet, és veszítsd el mind a lelkem szorongatóit, mert szolgád vagyok.

< சங்கீதம் 143 >