< சங்கீதம் 141 >

1 தாவீதின் பாடல். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
Псалом Давидів.
2 என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
Нехай ста́не молитва моя як кади́ло перед лицем Твоїм, підно́шення рук моїх — як жертва вечі́рня!
3 யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
Поклади, Господи, сторо́жу на у́ста мої, стережи́ двері губ моїх!
4 அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி என்னுடைய இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
Не дай нахиля́тися серцю моєму до речі лихо́ї, — щоб учи́нки робити безбо́жністю, із людьми, шо чинять пере́ступ, і щоб не ласува́вся я їхніми присма́ками!
5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.
Як праведний вра́зить мене, — то це милість, а доко́рить мені, — це оли́ва на го́лову, її не відкине моя голова, бо ще і молитва моя проти їхнього зла.
6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து தள்ளப்பட்டுபோகிறபோது, என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
Їхні су́дді по скелі розки́дані, та слова́ мої вчують, бо приємні вони.
7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol h7585)
Як дро́ва руба́ють й розко́люють їх на землі, так розки́дані наші кістки́ над отво́ром шео́лу. (Sheol h7585)
8 ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
Бо до Тебе, о Господи, Владико, мої очі, на Тебе наді́юсь — не зруйно́вуй мого життя!
9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
Бережи Ти від па́стки мене, що на мене поставили, та від тене́т переступників!
10 ௧0 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Хай безбожні попа́дають ра́зом до сі́тки своєї, а я промину́!

< சங்கீதம் 141 >