< சங்கீதம் 141 >
1 ௧ தாவீதின் பாடல். யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.
Dawid dwom. Ao Awurade, mesu mefrɛ wo, bra me nkyɛn ntɛm so. Sɛ mesu mefrɛ wo a, gye me so.
2 ௨ என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
Ma me mpaeɛbɔ mmra wʼanim sɛ aduhwam; ma me nsa a mapagya nyɛ sɛ anwummerɛ afɔrebɔ.
3 ௩ யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்; என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
Ao Awurade, ma ɔwɛmfoɔ nwɛn mʼano; na wɛn mʼano ɛpono.
4 ௪ அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி என்னுடைய இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
Mma wɔnntwe mʼakoma nkɔ deɛ ɛyɛ bɔne ho, na ankɔyɛ deɛ amumuyɛfoɔ yɛ no bi; mma me ne abɔnefoɔ nni wɔn nnɔkɔnnɔkɔwadeɛ.
5 ௫ நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.
Ma ɔteneneeni mmɔ me, ɛyɛ ayamyɛ; ma ɔnka mʼanim, ɛyɛ me tiri so ngo. Me tiri rempo. Me mpaeɛbɔ da so tia abɔnefoɔ nneyɛɛ daa.
6 ௬ அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து தள்ளப்பட்டுபோகிறபோது, என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
Wɔbɛto wɔn sodifoɔ afiri abotan so abɛhwe fam; na amumuyɛfoɔ bɛhunu sɛ me nsɛm no yɛ nokorɛ.
7 ௭ பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. (Sheol )
Wɔbɛka sɛ, “Sɛdeɛ obi funtum na ɔtutu asase no, saa ara na wɔabɔ yɛn nnompe ahwete ɛda ano.” (Sheol )
8 ௮ ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
Nanso, Ao Otumfoɔ Awurade, wo so na mʼani da; wo mu na mehinta. Nnya me mma owuo.
9 ௯ அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
Bɔ me ho ban firi mfidie a wɔasunsum me no mu, mfidie a abɔnefoɔ asunsum no.
10 ௧0 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.
Ma amumuyɛfoɔ no ankasa atena nyi wɔn, na menkɔ me baabi asomdwoeɛ mu.