< சங்கீதம் 140 >

1 இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, பொல்லாத மனிதனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்.
大衛的詩,交與伶長。 耶和華啊,求你拯救我脫離凶惡的人, 保護我脫離強暴的人!
2 அவர்கள் தங்களுடைய இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
他們心中圖謀奸惡, 常常聚集要爭戰。
3 பாம்பைப்போல் தங்களுடைய நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
他們使舌頭尖利如蛇, 嘴裏有虺蛇的毒氣。 (細拉)
4 யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
耶和華啊,求你拯救我脫離惡人的手, 保護我脫離強暴的人! 他們圖謀推我跌倒。
5 பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
驕傲人為我暗設網羅和繩索; 他們在路旁鋪下網,設下圈套。 (細拉)
6 நான் யெகோவாவை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; யெகோவாவே, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்குச் செவிகொடும்.
我曾對耶和華說:你是我的上帝。 耶和華啊,求你留心聽我懇求的聲音!
7 ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என்னுடைய தலையை மூடினீர்.
主-耶和華、我救恩的力量啊, 在爭戰的日子,你遮蔽了我的頭。
8 யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)
耶和華啊,求你不要遂惡人的心願; 不要成就他們的計謀,恐怕他們自高。 (細拉)
9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
至於那些昂首圍困我的人, 願他們嘴唇的奸惡陷害自己!
10 ௧0 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
願火炭落在他們身上! 願他們被丟在火中, 拋在深坑裏,不能再起來。
11 ௧௧ பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
說惡言的人在地上必堅立不住; 禍患必獵取強暴的人,將他打倒。
12 ௧௨ சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் யெகோவா விசாரிப்பாரென்று அறிவேன்.
我知道耶和華必為困苦人伸冤, 必為窮乏人辨屈。
13 ௧௩ நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.
義人必要稱讚你的名; 正直人必住在你面前。

< சங்கீதம் 140 >