< சங்கீதம் 14 >
1 ௧ இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
Az éneklőmesternek; Dávidé. Azt mondja a balgatag az ő szívében: Nincs Isten. Megromlottak, útálatosságot cselekedtek; nincs, a ki jót cselekedjék.
2 ௨ தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
Az Úr letekintett a mennyből az emberek fiaira, hogy meglássa, ha van-é értelmes, Istent kereső?
3 ௩ எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
Mindnyájan elhajlottak; egyetemben elromlottak, nincs, a ki jót cselekedjék, nincsen csak egy sem.
4 ௪ அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
Nem tudják-é ezt mind a gonosztévők, a kik megeszik az én népemet, mintha kenyeret ennének, az Urat pedig segítségül nem hívják?
5 ௫ அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
Majd rettegnek rettegéssel, mert Isten az igaz nemzetséggel van!
6 ௬ ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
A szegénynek tanácsát kicsúfoljátok, mert az Úr az ő bizodalma.
7 ௭ சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
Vajha eljőne Sionból Izráelnek a szabadítás! Mikor az Úr visszahozza népének foglyait, Jákób örül majd és vigad Izráel.