< சங்கீதம் 14 >

1 இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
大衛的詩,交與伶長。 愚頑人心裏說:沒有上帝。 他們都是邪惡,行了可憎惡的事; 沒有一個人行善。
2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
耶和華從天上垂看世人, 要看有明白的沒有, 有尋求上帝的沒有。
3 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
他們都偏離正路, 一同變為污穢; 並沒有行善的, 連一個也沒有。
4 அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
作孽的都沒有知識嗎? 他們吞吃我的百姓,如同吃飯一樣, 並不求告耶和華。
5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
他們在那裏大大地害怕, 因為上帝在義人的族類中。
6 ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
你們叫困苦人的謀算變為羞辱; 然而耶和華是他的避難所。
7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
但願以色列的救恩從錫安而出。 耶和華救回他被擄的子民那時, 雅各要快樂,以色列要歡喜。

< சங்கீதம் 14 >