< சங்கீதம் 137 >
1 ௧ பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
Давида. При реках Вавилона, там сидели мы и плакали, когда вспоминали о Сионе;
2 ௨ அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.
на вербах, посреди его, повесили мы наши арфы.
3 ௩ எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.
Там пленившие нас требовали от нас слов песней, и притеснители наши - веселья: “пропойте нам из песней Сионских”.
4 ௪ யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
Как нам петь песнь Господню на земле чужой?
5 ௫ எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக.
Если я забуду тебя, Иерусалим, - забудь меня десница моя;
6 ௬ நான் உன்னை நினைக்காமலும், எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால், என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
прилипни язык мой к гортани моей, если не буду помнить тебя, если не поставлю Иерусалима во главе веселия моего.
7 ௭ யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
Припомни, Господи, сынам Едомовым день Иерусалима, когда они говорили: “разрушайте, разрушайте до основания его”.
8 ௮ பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.
Дочь Вавилона, опустошительница! блажен, кто воздаст тебе за то, что ты сделала нам!
9 ௯ உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.
Блажен, кто возьмет и разобьет младенцев твоих о камень!