< சங்கீதம் 136 >

1 யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
הודו ליהוה כי-טוב כי לעולם חסדו
2 தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
הודו לאלהי האלהים כי לעולם חסדו
3 கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
הודו לאדני האדנים כי לעולם חסדו
4 ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לעשה נפלאות גדלות לבדו כי לעולם חסדו
5 வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לעשה השמים בתבונה כי לעולם חסדו
6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לרקע הארץ על-המים כי לעולם חסדו
7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
לעשה אורים גדלים כי לעולם חסדו
8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
את-השמש לממשלת ביום כי לעולם חסדו
9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
את-הירח וכוכבים לממשלות בלילה כי לעולם חסדו
10 ௧0 எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
למכה מצרים בבכוריהם כי לעולם חסדו
11 ௧௧ அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ויוצא ישראל מתוכם כי לעולם חסדו
12 ௧௨ வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ביד חזקה ובזרוע נטויה כי לעולם חסדו
13 ௧௩ சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לגזר ים-סוף לגזרים כי לעולם חסדו
14 ௧௪ அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
והעביר ישראל בתוכו כי לעולם חסדו
15 ௧௫ பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ונער פרעה וחילו בים-סוף כי לעולם חסדו
16 ௧௬ தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
למוליך עמו במדבר כי לעולם חסדו
17 ௧௭ பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
למכה מלכים גדלים כי לעולם חסדו
18 ௧௮ பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ויהרג מלכים אדירים כי לעולם חסדו
19 ௧௯ எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
לסיחון מלך האמרי כי לעולם חסדו
20 ௨0 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ולעוג מלך הבשן כי לעולם חסדו
21 ௨௧ அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ונתן ארצם לנחלה כי לעולם חסדו
22 ௨௨ அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
נחלה לישראל עבדו כי לעולם חסדו
23 ௨௩ நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
שבשפלנו זכר לנו כי לעולם חסדו
24 ௨௪ நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
ויפרקנו מצרינו כי לעולם חסדו
25 ௨௫ உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
נתן לחם לכל-בשר כי לעולם חסדו
26 ௨௬ பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
הודו לאל השמים כי לעולם חסדו

< சங்கீதம் 136 >