< சங்கீதம் 136 >
1 ௧ யெகோவாவை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
Praise the Lord, for he is good: for his mercy endureth for ever.
2 ௨ தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Praise ye the God of gods: for his mercy endureth for ever.
3 ௩ கர்த்தாதி யெகோவாவை துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Praise ye the Lord of lords: for his mercy endureth for ever.
4 ௪ ஒருவராக பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who alone doth great wonders: for his mercy endureth for ever.
5 ௫ வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who made the heavens in understanding: for his mercy endureth for ever.
6 ௬ தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who established the earth above the waters: for his mercy endureth for ever.
7 ௭ பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
Who made the great lights: for his mercy endureth for ever.
8 ௮ பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
The sun to rule over the day: for his mercy endureth for ever.
9 ௯ இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
The moon and the stars to rule the night: for his mercy endureth for ever.
10 ௧0 எகிப்தியர்களுடைய தலைப்பிள்ளைகளை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who smote Egypt with their firstborn: for his mercy endureth for ever.
11 ௧௧ அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படச்செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who brought Israel from among them: for his mercy endureth for ever.
12 ௧௨ வலிமையான கையினாலும் தோளின் பலத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
With a mighty hand and a stretched out arm: for his mercy endureth for ever.
13 ௧௩ சிவந்த கடலை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who divided the Red Sea into parts: for his mercy endureth for ever.
14 ௧௪ அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And brought out Israel through the midst thereof: for his mercy endureth for ever.
15 ௧௫ பார்வோனையும் அவன் சேனைகளையும் செங்கடலில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And overthrew Pharao and his host in the Red Sea: for his mercy endureth for ever.
16 ௧௬ தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who led his people through the desert: for his mercy endureth for ever.
17 ௧௭ பெரிய ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who smote great kings: for his mercy endureth for ever.
18 ௧௮ பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And slew strong kings: for his mercy endureth for ever.
19 ௧௯ எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Sehon king of the Amorrhites: for his mercy endureth for ever.
20 ௨0 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And Og king of Basan: for his mercy endureth for ever.
21 ௨௧ அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And he gave their land for an inheritance: for his mercy endureth for ever.
22 ௨௨ அதைத் தம்முடைய ஊழியனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
For an inheritance to his servant Israel: for his mercy endureth for ever.
23 ௨௩ நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
For he was mindful of us in our affliction: for his mercy endureth for ever.
24 ௨௪ நம்முடைய எதிரிகளின் கையிலிருந்து நம்மை விடுதலை செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
And he redeemed us from our enemies: for his mercy endureth for ever.
25 ௨௫ உயிரினம் அனைத்திற்கும் ஆகாரம் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Who giveth food to all flesh: for his mercy endureth for ever.
26 ௨௬ பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Give glory to the God of heaven: for his mercy endureth for ever.