< சங்கீதம் 135 >
1 ௧ அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
Praise Yahweh! You who (do work for/serve) Yahweh, praise him!
2 ௨ யெகோவாவுடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, யெகோவாவை துதியுங்கள்.
You who stand in the temple of Yahweh our God and in the surrounding courtyard, praise him [MTY]!
3 ௩ யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது.
Praise Yahweh, because he does good things [for us]; sing to him [MTY], because he is kind [to us].
4 ௪ யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
He has chosen [us, the descendants of] Jacob; he has chosen [us] Israelis to belong to him [DOU].
5 ௫ யெகோவா பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
I know that Yahweh is great; he is greater than all the gods.
6 ௬ வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
Yahweh does whatever he desires to do, in heaven and on the earth and in the seas/oceans, [down] to the bottom of the seas.
7 ௭ அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.
He is the one who causes clouds to appear from very distant places on the earth; he sends lightning with the rain, and he brings the winds from the places where he stores them.
8 ௮ அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
He is the one who killed [all] the firstborn [males] in Egypt, the firstborn of people and of animals.
9 ௯ எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
There he performed many kinds of miracles [DOU] to punish the king and all his officials.
10 ௧0 அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
He destroyed many nations and the powerful kings [who ruled them]:
11 ௧௧ எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
Sihon, the king of the Amor people-group, and Og, the king of Bashan [region], and all the other kings in Canaan [land].
12 ௧௨ அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
Then he gave their land to [us] Israeli people to belong to us [forever].
13 ௧௩ யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
Yahweh your name will endure forever, and people who are not yet born will remember the great things [that you have done].
14 ௧௪ யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
Yahweh, [you] declare that we your people (are innocent/have not done things that are wrong), and you are merciful to us.
15 ௧௫ அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
But the idols that the [other] people-groups [worship] are only [statues made of] silver and gold, things that humans have made.
16 ௧௬ அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Their idols have mouths, but they cannot say [anything]; they have eyes, but they cannot see [anything].
17 ௧௭ அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
They have ears, but they cannot hear [anything], and they are not [even able to] breathe.
18 ௧௮ அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
The people who make those idols are as [powerless as] those idols, and those who trust in those idols [can accomplish no more than] their idols can!
19 ௧௯ இஸ்ரவேல் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
[My fellow] Israelis, praise Yahweh! You [priests] who are descended from Aaron, praise Yahweh!
20 ௨0 லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
You [men] who are descended from Levi, [you who assist the priests], praise Yahweh! [All] you who revere Yahweh, praise him!
21 ௨௧ எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.
Praise Yahweh in [the temple on] Zion [Hill] in Jerusalem, where he lives! Praise Yahweh!