< சங்கீதம் 134 >
1 ௧ ஆரோகண பாடல். இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
A Song of degrees. Behold, bless Jehovah, all ye servants of Jehovah, who by night stand in the house of Jehovah.
2 ௨ உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.
Lift up your hands in the sanctuary, and bless Jehovah.
3 ௩ வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
Jehovah, the maker of heavens and earth, bless thee out of Zion.