< சங்கீதம் 132 >
1 ௧ ஆரோகண பாடல். யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
song [the] step to remember LORD to/for David [obj] all to afflict he
2 ௨ அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை,
which to swear to/for LORD to vow to/for mighty Jacob
3 ௩ என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
if: surely no to come (in): come in/on/with tent: home house: home my if: surely no to ascend: rise upon bed bed my
4 ௪ என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
if: surely no to give: give sleep to/for eye my to/for eyelid my slumber
5 ௫ யெகோவாவுக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குப் பொருத்தனை செய்தான்.
till to find place to/for LORD tabernacle to/for mighty Jacob
6 ௬ இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வயல்வெளிகளில் அதைக் கண்டோம்.
behold to hear: hear her in/on/with Ephrath to find her in/on/with land: country Jaar
7 ௭ அவருடைய ஆலயத்தின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து, அவர் பாதத்தில் பணிவோம்.
to come (in): come to/for tabernacle his to bow to/for footstool foot his
8 ௮ யெகோவாவே, உமது வல்லமை வெளிப்படும் பெட்டியுடன் நீர் உமது தங்கும் இடத்திற்குள் எழுந்தருளும்.
to arise: rise [emph?] LORD to/for resting your you(m. s.) and ark strength your
9 ௯ உம்முடைய ஆசாரியர்கள் நீதியை அணிந்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிக்கட்டும்.
priest your to clothe righteousness and pious your to sing
10 ௧0 நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும்.
in/on/with for the sake of David servant/slave your not to return: turn back face anointed your
11 ௧௧ உன்னுடைய கர்ப்பத்தின் பிள்ளையை உன்னுடைய சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும்,
to swear LORD to/for David truth: faithful not to return: return from her from fruit belly: body your to set: make to/for throne to/for you
12 ௧௨ உன்னுடைய மகன்கள் என்னுடைய உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்னுடைய சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் மகன்களும் என்றென்றைக்கும் உன்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பார்கள் என்றும், யெகோவா தாவீதிற்கு உண்மையாக ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
if to keep: obey son: descendant/people your covenant my and testimony my this to learn: teach them also son: descendant/people their perpetuity perpetuity to dwell to/for throne to/for you
13 ௧௩ யெகோவா சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்குக் குடியிருக்கும் இடமாகும்படி விரும்பினார்.
for to choose LORD in/on/with Zion to desire her to/for seat to/for him
14 ௧௪ இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினதால், இங்கே தங்குவேன்.
this resting my perpetuity perpetuity here to dwell for to desire her
15 ௧௫ அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.
food her to bless to bless needy her to satisfy food: bread
16 ௧௬ அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை அணிவிப்பேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.
and priest her to clothe salvation and pious her to sing to sing
17 ௧௭ அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கச்செய்வேன்; நான் அபிஷேகம் செய்தவவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்செய்தேன்.
there to spring horn to/for David to arrange lamp to/for anointed my
18 ௧௮ அவனுடைய எதிரிகளுக்கு வெட்கத்தை அணிவிப்பேன்; அவன் மீதோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
enemy his to clothe shame and upon him to blossom consecration: crown his