< சங்கீதம் 131 >

1 தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை, என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.
Ein Wallfahrtslied Davids. HERR, mein Herz ist nicht hochfahrend,
2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்; என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
Nein, ich habe mein Herz beruhigt und gestillt; wie ein entwöhntes Kind an der Mutter Brust, so ruht entwöhnt mein Herz in mir. –
3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக.
Israel, harre des HERRN von nun an bis in Ewigkeit.

< சங்கீதம் 131 >