< சங்கீதம் 130 >
1 ௧ ஆரோகண பாடல். யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Een bedevaartslied. Uit de diepten, o Jahweh, roep ik tot U,
2 ௨ ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
Heer, hoor mijn klagen; Laat uw oren toch luisteren Naar mijn bidden en smeken!
3 ௩ யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
Ach Jahweh, zo Gij de zonde gedenkt, Ach Heer, wie zou het bestaan?
4 ௪ உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
Neen, bij U is vergeving, Opdat ik vol hoop U zou vrezen, o Jahweh.
5 ௫ யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
Mijn ziel schouwt hunkerend naar zijn belofte, Mijn ziel smacht naar den Heer;
6 ௬ எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
Meer dan wachters naar de morgen,
7 ௭ இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
Ziet Israël naar Jahweh uit. Want bij Jahweh is ontferming, En overvloed van verlossing;
8 ௮ அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.
Hij zal Israël bevrijden Van al zijn zonden!