< சங்கீதம் 13 >
1 ௧ சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?
Au maître de chant. Chant de David. Jusques à quand, Yahweh, m’oublieras-tu toujours? Jusques à quand me cacheras-tu ta face?
2 ௨ என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்?
Jusques à quand formerai-je en mon âme des projets, et chaque jour le chagrin remplira-t-il mon cœur? Jusques à quand mon ennemi s’élèvera-t-il contre moi?
3 ௩ என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.
Regarde, réponds-moi, Yahweh, mon Dieu! Donne la lumière à mes yeux, afin que je ne m’endorme pas dans la mort,
4 ௪ அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும்.
afin que mon ennemi ne dise pas: « Je l’ai vaincu! » et que mes adversaires ne se réjouissent pas en me voyant chanceler.
5 ௫ நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும்.
Moi, j’ai confiance en ta bonté; mon cœur tressaillira à cause de ton salut,
6 ௬ யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
je chanterai Yahweh pour le bien qu’il m’a fait.