< சங்கீதம் 129 >

1 ஆரோகண பாடல். என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள்.
En vallfartssång. Mycken nöd hava de vållat mig allt ifrån min ungdom -- så säge Israel --
2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள்.
mycken nöd hava de vållat mig allt ifrån min ungdom, dock blevo de mig ej övermäktiga.
3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.
På min rygg hava plöjare plöjt och dragit upp långa fåror.
4 யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Men HERREN är rättfärdig och har huggit av de ogudaktigas band.
5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள்.
De skola komma på skam och vika tillbaka, så många som hata Sion.
6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
De skola bliva lika gräs på taken, som vissnar, förrän det har vuxit upp;
7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை.
ingen skördeman fyller därmed sin hand, ingen kärvbindare sin famn,
8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.
och de som gå där fram kunna icke säga: »HERRENS välsignelse vare över eder! Vi välsigna eder i HERRENS namn.»

< சங்கீதம் 129 >