< சங்கீதம் 128 >
1 ௧ ஆரோகண பாடல். யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
Svētku dziesma. Svētīgs ikviens, kas To Kungu bīstas un staigā viņa ceļos.
2 ௨ உன்னுடைய கைகளின் உழைப்பை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
Tu mitināsies no savu roku darba; svētīgs tu esi, tev labi klājās.
3 ௩ உன்னுடைய மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சைக்கொடியைப்போல் இருப்பாள்; உன்னுடைய பிள்ளைகள் உன்னுடைய பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Tava sieva būs kā auglīgs vīna koks ap tavu namu, tavi bērni kā eļļas zari ap tavu galdu.
4 ௪ இதோ, யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.
Redzi, tā ir svētīts tas vīrs, kas To Kungu bīstas.
5 ௫ யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ உயிருள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
Tas Kungs lai tevi svētī no Ciānas, ka tu redzi Jeruzālemes labumu visas savas mūža dienas,
6 ௬ நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
Un redzi savu bērnu bērnus: Miers lai ir pār Israēli.