< சங்கீதம் 126 >

1 ஆரோகண பாடல். சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Наші у́ста тоді були́ повні весе́лощів, а язик наш — співа́ння! Казали тоді між наро́дами: Велике вчини́в Господь з ними!“
3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
Велике вчини́в Господь з нами, — були ра́дісні ми!
4 யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
Вернися ж із нашим поло́ном, о Господи, немо́в ті джере́ла, на пі́вдень!
5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
Хто сіє з слізьми́, зо спі́вом той жне:
6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
все хо́дить та плаче, хто но́сить торби́ну насіння на по́сів, — та ве́рнеться з співом, хто но́сить снопи́ свої!

< சங்கீதம் 126 >