< சங்கீதம் 126 >
1 ௧ ஆரோகண பாடல். சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
Grádicsok éneke. Mikor visszahozta az Úr Sionnak foglyait, olyanok voltunk, mint az álmodók.
2 ௨ அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Akkor megtelt a szánk nevetéssel, nyelvünk pedig vígadozással. Akkor így szóltak a pogányok: Hatalmasan cselekedett ezekkel az Úr!
3 ௩ யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
Hatalmasan cselekedett velünk az Úr, azért örvendezünk.
4 ௪ யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
Hozd vissza, Uram, a mi foglyainkat, mint patakokat a déli földön!
5 ௫ கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
A kik könyhullatással vetnek, vígadozással aratnak majd.
6 ௬ அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
A ki vetőmagját sírva emelve megy tova, vígadozással jő elő, kévéit emelve.