< சங்கீதம் 124 >
1 ௧ தாவீதின் ஆரோகண பாடல். மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
Davidin veisu korkeimmassa Kuorissa. Ellei Herra olisi meidän kanssamme, niin sanokaan Israel:
2 ௨ யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
Ellei Herra olisi meidän kanssamme, koska ihmiset karkaavat meitä vastaan,
3 ௩ அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
Niin he nielisivät meidät elävältä, kuin heidän vihansa julmistuu meidän päällemme;
4 ௪ அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
Niin vesi meitä upottais: kosket kävisivät sieluimme ylitse:
5 ௫ கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Niin ylpiät veden aallot kävisivät sielumme ylitse.
6 ௬ நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.
Kiitetty olkoon Herra, joka ei meitä anna raatelukseksi heidän hampaillensa!
7 ௭ வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
Meidän sielumme pääsi niinkuin lintu lintumiehen paulasta. Paula on särjetty, ja me olemme päästetyt.
8 ௮ நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.
Meidän apumme on Herran nimessä, joka taivaan ja maan tehnyt on.