< சங்கீதம் 123 >
1 ௧ ஆரோகண பாடல். பரலோகத்தில் இருக்கிறவரே, உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன்.
天にいますものよ我なんぢにむかひて目をあぐ
2 ௨ தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.
みよ僕その主の手に目をそそぎ 婢女その主母の手に目をそそぐがごとく われらはわが神ヱホバに目をそそぎて そのわれを憐みたまはんことをまつ
3 ௩ எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, எங்களுக்கு இரங்கும்; அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.
ねがはくはわれらを憐みたまヘ ヱホバよわれらを憐みたまへ そはわれらに軽侮はみちあふれぬ
4 ௪ சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
おもひわづらひなきものの凌辱と たかぶるものの軽侮とはわれらの霊魂にみちあふれぬ