< சங்கீதம் 122 >
1 ௧ தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
Hodočasnička pjesma. Davidova. Obradovah se kad mi rekoše: “Hajdemo u Dom Jahvin!”
2 ௨ எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
Eto, noge nam već stoje na vratima tvojim, Jeruzaleme.
3 ௩ எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
Jeruzaleme, grade čvrsto sazdani i kao u jedno saliveni!
4 ௪ அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
Onamo uzlaze plemena, plemena Jahvina, po Zakonu Izraelovu, da slave ime Jahvino.
5 ௫ அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
Ondje stoje sudačke stolice, stolice doma Davidova.
6 ௬ எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
Molite za mir Jeruzalemov! Blago onima koji tebe ljube!
7 ௭ உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
Neka bude mir u zidinama tvojim i pokoj u tvojim palačama!
8 ௮ என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
Radi braće i prijatelja svojih klicat ću: “Mir tebi!”
9 ௯ எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
Radi Doma Jahve, Boga našega, za sreću tvoju ja ću moliti.