< சங்கீதம் 122 >

1 தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
我喜歡,因為有人向我說:我們要進入上主的聖殿。
2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
耶路撒冷!我們的雙足已經站立在您的門口。
3 எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
耶路撒冷的建築好似京城,確是內部劃一整齊的京城。
4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
各支派,上主的各支派都齊聚在那裡,按照以色列的法律讚頌上主的名字。
5 அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
那裡設立了執政者的座席,那裡有達味王室的寶位。
6 எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
請為耶路撒冷祈禱和平;願愛慕您的人獲享安寧,
7 உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
願在您的城垣內有平安,願在您的堡壘中有安全。
8 என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
為了我的兄弟和同伴們,我要向您說:祝您平安!
9 எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
為了上主我們天主的殿宇,我為您懇切祈禱,祝您幸福。

< சங்கீதம் 122 >