< சங்கீதம் 121 >
1 ௧ ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
Grádicsok éneke. Szemeimet a hegyekre emelem, onnan jön az én segítségem.
2 ௨ வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
Az én segítségem az Úrtól van, a ki teremtette az eget és földet.
3 ௩ உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
Nem engedi, hogy lábad inogjon; nem szunnyad el a te őriződ.
4 ௪ இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
Ímé, nem szunnyad és nem alszik az Izráelnek őrizője!
5 ௫ யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
Az Úr a te őriződ, az Úr a te árnyékod a te jobbkezed felől.
6 ௬ பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
Nappal a nap meg nem szúr téged, sem éjjel a hold.
7 ௭ யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
Az Úr megőriz téged minden gonosztól, megőrzi a te lelkedet.
8 ௮ யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
Megőrzi az Úr a te ki- és bemeneteledet, mostantól fogva mindörökké!