< சங்கீதம் 120 >
1 ௧ ஆரோகண பாடல். என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
われ困苦にあひてヱホバをよびしかば我にこたへたまへり
2 ௨ யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
ヱホバよねがはくは虚偽のくちびる欺詐の舌よりわが霊魂をたすけいだしたまへ
3 ௩ வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
あざむきの舌よなんぢに何をあたへられ 何をくはへらるべきか
4 ௪ பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
ますらをの利き箭と金萑花のあつき炭となり
5 ௫ ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும், கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
わざはひなるかな我はメセクにやどりケダルの幕屋のかたはらに住めり
6 ௬ சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
わがたましひは平安をにくむものと偕にすめり
7 ௭ நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.
われは平安をねがふ されど我ものいふときにかれら戰爭をこのむ