< சங்கீதம் 12 >
1 ௧ செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
Načelniku godbe po osmini, psalm Davidov. Daj rešenje, Gospod, ker minil je dobrodelnik; ker izginili so resnični izmed sinov človeških.
2 ௨ அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
Prazno govoré drug z drugim, s priliznenimi ustnami, z vojnim srcem govoré.
3 ௩ வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
Pokončal bode Gospod vse priliznene ustne, jezik visokobesedni;
4 ௪ அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
Njih, ki govoré: Našega jezika pravica bode obveljala, ustne naše so v naši oblasti, kdo bi bil nam gospod?
5 ௫ ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Od zatiranja siromakov ubozih, od vpitja revežev vstanem skoraj, govori Gospod; pomagal bodem njemu, v katerega bode pihal žarjavico krivični.
6 ௬ யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன.
Besede Gospodove so čiste besede, srebro očiščeno v izbrani prsteni posodi, osnaženo sedemkrat.
7 ௭ யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, எங்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
Ti, Gospod, ohrani jih; vsakega izmed njih brani tega rodu na veke.
8 ௮ மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
Krivični hodijo okrog povsodi, ko se povzdiguje malopridna reč med človeškimi sinovi.