< சங்கீதம் 116 >

1 யெகோவா என்னுடைய சத்தத்தையும் என்னுடைய விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
אהבתי כי-ישמע יהוה-- את-קולי תחנוני
2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
כי-הטה אזנו לי ובימי אקרא
3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். (Sheol h7585)
אפפוני חבלי-מות--ומצרי שאול מצאוני צרה ויגון אמצא (Sheol h7585)
4 அப்பொழுது நான் யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொண்டு: யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன்.
ובשם-יהוה אקרא אנה יהוה מלטה נפשי
5 யெகோவா கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனவுருக்கம் உள்ளவர்.
חנון יהוה וצדיק ואלהינו מרחם
6 யெகோவா கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னைப் பாதுகாத்தார்.
שמר פתאים יהוה דלתי ולי יהושיע
7 என் ஆத்துமாவே, யெகோவா உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
שובי נפשי למנוחיכי כי-יהוה גמל עליכי
8 என் ஆத்துமாவை மரணத்திற்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.
כי חלצת נפשי ממות את-עיני מן-דמעה את-רגלי מדחי
9 நான் யெகோவாவுக்கு முன்பாக உயிருள்ளவர்கள் தேசத்திலே நடப்பேன்.
אתהלך לפני יהוה-- בארצות החיים
10 ௧0 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகவும் வருத்தப்பட்டேன்.
האמנתי כי אדבר אני עניתי מאד
11 ௧௧ எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.
אני אמרתי בחפזי כל-האדם כזב
12 ௧௨ யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
מה-אשיב ליהוה-- כל-תגמולוהי עלי
13 ௧௩ இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.
כוס-ישועות אשא ובשם יהוה אקרא
14 ௧௪ நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும் செலுத்துவேன்.
נדרי ליהוה אשלם נגדה-נא לכל-עמו
15 ௧௫ யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் அவருடைய பார்வைக்கு அருமையானது.
יקר בעיני יהוה-- המותה לחסידיו
16 ௧௬ யெகோவாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் மகனும், உமது ஊழியக்காரனுமாக இருக்கிறேன்; என்னுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.
אנה יהוה כי-אני עבדך אני-עבדך בן-אמתך פתחת למוסרי
17 ௧௭ நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, யெகோவாவுடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.
לך-אזבח זבח תודה ובשם יהוה אקרא
18 ௧௮ நான் யெகோவாவுக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய மக்களெல்லோருக்கும் முன்பாகவும்,
נדרי ליהוה אשלם נגדה-נא לכל-עמו
19 ௧௯ யெகோவாவுடைய ஆலயத்தின் முற்றங்களிலும், எருசலேமே உன்னுடைய நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.
בחצרות בית יהוה-- בתוככי ירושלם הללו-יה

< சங்கீதம் 116 >