< சங்கீதம் 115 >

1 தாவீதின் பாடல். எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.
Не нам, Господи, не нам, но имени Твоему дай славу, ради милости Твоей, ради истины Твоей.
2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?
Для чего язычникам говорить: “где же Бог их”?
3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.
Бог наш на небесах и на земле; творит все, что хочет.
4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
А их идолы - серебро и золото, дело рук человеческих.
5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Есть у них уста, но не говорят; есть у них глаза, но не видят;
6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.
есть у них уши, но не слышат; есть у них ноздри, но не обоняют;
7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது; தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.
есть у них руки, но не осязают; есть у них ноги, но не ходят; и они не издают голоса гортанью своею.
8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Подобны им да будут делающие их и все, надеющиеся на них.
9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Дом Израилев! уповай на Господа: Он наша помощь и щит.
10 ௧0 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Дом Ааронов! уповай на Господа: Он наша помощь и щит.
11 ௧௧ யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.
Боящиеся Господа! уповайте на Господа: Он наша помощь и щит.
12 ௧௨ யெகோவா நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.
Господь помнит нас, благословляет нас, благословляет дом Израилев, благословляет дом Ааронов;
13 ௧௩ யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும், சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.
благословляет боящихся Господа, малых с великими.
14 ௧௪ யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.
Да приложит вам Господь более и более, вам и детям вашим.
15 ௧௫ வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Благословенны вы Господом, сотворившим небо и землю.
16 ௧௬ வானங்கள் யெகோவாவுடையவைகள்; பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.
Небо - небо Господу, а землю Он дал сынам человеческим.
17 ௧௭ இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.
Ни мертвые восхвалят Господа, ни все нисходящие в могилу;
18 ௧௮ நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம். அல்லேலூயா.
но мы живые будем благословлять Господа отныне и вовек. Аллилуия

< சங்கீதம் 115 >