< சங்கீதம் 114 >

1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
کاتێک ئیسرائیل لە میسر هاتنە دەرەوە، بنەماڵەی یاقوب لەنێو گەلێکی نامۆ زمان دەرچوون،
2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
یەهودا بووە پیرۆزگای خودا، ئیسرائیل بووە جێی فەرمانڕەوایەتی.
3 கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
دەریا بینی و هەڵات، ڕووباری ئوردون بەرەو پاش کشایەوە.
4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
چیاکان وەک بەران بازیان دا، گردەکان وەک بەرخۆلە.
5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
چیتە ئەی دەریا، بۆ وا هەڵدێیت؟ ئەی ئوردون، بۆ بەرەو پاش دەکشێیتەوە؟
6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
ئەی چیاکان، بۆ وەک بەران باز دەدەن و ئێوەش ئەی گردەکان، وەک بەرخۆلە؟
7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
ئەی زەوی لەبەردەم پەروەردگار بلەرزە، لەبەردەم خودای یاقوب،
8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
ئەوەی بەردی کرد بە گۆمی ئاو، بەردەئەستێی کردە کانیاو.

< சங்கீதம் 114 >