< சங்கீதம் 114 >
1 ௧ இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
When Israel went out of Egypt, the house of Jacob from a people of strange language;
2 ௨ யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
Judah was his sanctuary, and Israel his dominion.
3 ௩ கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
The sea saw it, and fled: Jordan was driven back.
4 ௪ மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
The mountains skipped like rams, and the little hills like lambs.
5 ௫ கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
What ailed thee, O thou sea, that thou fleddest? thou Jordan, that thou wast driven back?
6 ௬ மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
Ye mountains, that ye skipped like rams; and ye little hills, like lambs?
7 ௭ பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
Tremble, thou earth, at the presence of the Lord, at the presence of the God of Jacob;
8 ௮ அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
Which turned the rock into a standing water, the flint into a fountain of waters.